Trend Lancer

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அதில் பிரபல்யமான ஒன்று தான் Fiverr. Fiverr எனப்படும் Freelancing இணையத்தளம் பற்றி தான் விளக்குகிறோம். நீங்கள் ஏற்கனவே அதைப் பற்றி அறிந்திருக்கலாம். ஆனால் இது பற்றி உங்களுக்கு தெறியாத சில விடயங்களை இணைத்துள்ளோம்

Fiverr என்பது உலகளாவிய ரீதியில் ஆன்லைன் சந்தையாக செயல்படும் மிகவும் பிரபலமான இணையதளமாகும். Ebay , Amazon , Ali Express போன்ற தளங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் பிரபலமானது போல, Fiverr என்பது இணையத்தில் சேவைகளை வழங்குவதற்கும் பெறுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு பிரபலமான வலைத்தளமாகும். இந்த இணையதளத்தின் மூலம் கணினி மற்றும் இணையம் தொடர்பான பல தரப்பட்ட சேவைகளைப் பெறவும் வழங்கவும் முடியும்.

Fiverr வழங்கும் சேவைக்கான கட்டணமானது ஐந்து டாலர்களில் தொடங்கும் . இதன் காரணமாக இத் தளத்திற்கு Fiverr என்று பெயரிடப்பட்டது. எந்தவொரு நிறுவனத்திலும் முழுநேர ஊழியர்களாக இல்லாமல் ஃப்ரீலான்ஸர்களாக உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்கு பயன்படுத்துகின்றனர்.

வீட்டிலிருந்து ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து அவ்வப்போது பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை போலியானவை மற்றும் ஏமாற்றுவதற்காகவே உள்ளன. இதுபோன்ற விளம்பரங்களுக்கு மத்தியில், Fiverr தளம் கடந்த பத்து ஆண்டுகளாக உண்மையான ஆன்லைன் வணிக வாய்ப்பை வழங்கி வருகிறது, இதில் திறமையான நபர் எந்த போலியும் இல்லாமல் மாதந்தோறும் லட்சங்களை சம்பாதிக்க முடியும்.

Freelancer, Upwork, Peoplesperhour போன்ற இன்னும் பல இணையதளங்கள், fivetr போன்ற ஆன்லைன் சேவைகளை வழங்குகின்றன. அவை உலகளவில் மிகவும் பிரபலமாகவும் உள்ளன. இந்த தளங்கள் பெருகிய முறையில் நிறுவன அடிப்படையிலான மற்றும் அதிக நேரம் எடுக்கும் பெரிய திட்டங்களை சந்தைப்படுத்துகின்றன.

ஆனால் இதற்கு மாறாக, Fivetr தளமானது மைக்ரோ வேலைகள் எனப்படும் மிகச் சிறிய வேலைகளை சந்தைப்படுத்துகிறது. சில சமயங்களில் உங்கள் திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து வேலையை இரண்டு மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நிமிடங்களிலோ செய்து முடிக்கலாம். கொடுத்த வேலையை ஒரு நிமிடத்தில் முடித்தாலும், அந்த வேலைக்கான கூலியாக ஐந்து டாலர்கள் உத்தரவாதம் என்பது ஆச்சரியமான உண்மை.

Fiverr நிறுவனம் கூறுகையில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எங்களிடம் பல திறன் கொண்ட பணியாளர்கள் காத்திருக்கின்றனர். நீங்கள் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களை நீங்களே பணியமர்த்தலாம். திருப்திகரமான சேவையையும் பெறுவீர்கள். பணியாளருக்கு திருப்திகரமான ஊதியமும் கிடைக்கும். ஐவர் வேலை செய்வது இப்படித்தான், நடுநிலையாளர்களாகிய எங்களுக்கும் ஒரு சிறிய கமிஷன் கிடைக்கிறது

Fiverrரில்

  • கிராஃபிக் டிசைனிங்,
  • லோகோ டிசைனிங்
  • வலை வடிவமைப்பு,
  • வலைப்பதிவு உள்ளடக்கம் எழுதுதல்
  • வீடியோக்களுக்கு குரல் கொடுக்கவும்
  • கார்ட்டூன் வீடியோ உருவாக்கம்
  • சட்டை வடிவமைப்பு,
  • சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல்,
  • காணொளி தொகுப்பாக்கம்,
  • மெய்நிகர் உதவியாளர் வேலை (மெய்நிகர் உதவியாளர்), கணனி செய்நிரலாக்கம்
  • ஆண்ட்ராய்டு ஆப் டெவலப்மெண்ட் மற்றும் தரவு உள்ளீடு
    போன்றவை மிகவும் பிரபலமான மற்றும் தேவைப்படும் டிஜிட்டல் சேவைகளாகக் கருதப்படுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்டவை தவிர, மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல், பாடத்திட்ட மேம்பாடு, வணிகம், ஆலோசனை போன்ற பல ஆன்லைன் சேவைகளை நீங்கள் Fiverr தளத்தில் பட்டியலிடலாம்.

Fiverr இல் வழங்கப்படும் எந்த சேவையும் “Gig” என்று அழைக்கப்படுகிறது.  “சிறுவர்களுக்காக தரமான லோகோவை என்னால் வடிவமைக்க முடியும்” என்பது சேவை வழங்குநருக்கு “கிக்” ஆக இருக்கலாம்.

“Gigs” எனப்படும் சேவைகளை வழங்க பதிவு செய்த பயனர் அல்லது ஃப்ரீலான்ஸர் விற்பனையாளர் என்று அழைக்கப்படுகிறார். அதே போல், சேவைகளைப் பெற பதிவு செய்யப்பட்ட பயனர் அல்லது ஃப்ரீலான்ஸரை பணியமர்த்தும் நபர் (வாங்குபவர்) வாடிக்கையாளர் அல்லது சேவை பெறுநர் என்றும் அறியப்படுகிறார்.

Fiverr இல் சேவைகளைப் பெற அல்லது வழங்க ஒரு கணக்கு தேவை. இந்த கணக்கை Fiverr இல் இலவசமாக உருவாக்கலாம். Fiverr இல் சேவை பெறுநராக கணக்கை உருவாக்கி சேவைகளைப் பெறுவது எளிது. ஆனால், சேவை வழங்குநராகப் பதிவுசெய்து, நீங்கள் வழங்கக்கூடிய “Gig” சேவைகளை உருவாக்கி, அதற்கான வாடிக்கையாளர்களைப் பெறுவது, ஃபைவருக்குப் புதியவர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம்.

நீங்கள் fiverr இல் சேவை வழங்குநராகப் பதிவுசெய்து, உங்கள் “gig” அங்கீகரிக்கப்பட்டதும், அது fiver சந்தையில் பொருத்தமான பிரிவில் பட்டியலிடப்படும்.

Fiverr எனும் platform இல் எப்படி பணம் சம்பாதிப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?