Fiverr இல் சேவைகளைப் பெறவோ அல்லது வழங்கவோ எதுவாக இருந்தாலும் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும். இக்கணக்கை இலவசமாகவே ஃபைவரில் உருவாக்கிக் கொள்ள முடியும்.
“Gigs” எனப்படும் சேவைகளை வழங்கப் பதிவு செய்த பயனர் அல்லது freelancer ராகப் பணியாற்றும் நபர் (seller) விற்பனையாளர் என அழைக்கப்படுகிறார். அதே போன்று ”Gigs” களை வாங்க அல்லது சேவைகளைப் பெறுவதற்காக Register செய்யப்பட்ட பயனரை அல்லது freelancer ப் பணியமர்த்தும் நபர் (buyer) வாடிக்கையாளர் அல்லது சேவைபெறுநர் எனவும் அழைக்கப்படுகிறார்.
Fiverr இல் சேவை பெறுநராக கணக்கொன்றை உருவாக்கி சேவைகளைப் பெறுவதென்பது இலகுவானவிடயம்தான். ஆனால் சேவைவழங்குநராகப் பதிவுசெய்து உங்களால் வழங்கக் கூடிய சேவைகளை ”Gigs” உருவாக்கி அதற்கு வாடிக்கையாளர்களைப் பெறுவது என்பது ஃபைவருக்குப் புதியவர்களுக்கு சற்று சிரமமான காரியம்தான்.
நீங்கள் fiverr இல் சேவை வழங்குனராகப் பதிவு செய்து உங்கள் ”Gigs” அங்கீகரிக்கப்பட்டதும், அது ஃபைவர் சந்தையில் உரிய பிரிவில் பட்டியலிடப்படும். அதனைப் பட்டியலிடுவதால் மட்டும் உங்களுக்கான வேலை கிடைத்து விடுவதில்லை. உங்கள் ’கிக்’ வாடிக்கையாளரைக் கவரும் படியாக இருக்கவேண்டும்.
ஃபைவரிற்குப் புதியவர்கள் ‘Gigs’ உருவாக்கி விட்டு உங்களுக்கான வாடிக்கையாளர் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டு,ம். அந்தக் காத்திருப்பு ஒரு சில நாட்கள் முதல் ஒரு சில மாதங்கள் வரை கூட இருக்கலாம். மேலும் இங்கு வாடிக்கையாளரோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுடைய திருப்தியடைய மட்டும் சேவையாற்ற வேண்டும். எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் ஓரளவு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பொதுவாக ஃபைவர் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டுக்காரர்களாகவே இருப்பர்.
உங்கள் ‘Gigs’ஐ யாராவது ஆர்டர் செய்தால், ஃபைவர் உங்களுக்கு அறிவித்து விட்டு வாங்குபவரிடம் முன்கூட்டியே கட்டணம் அறவிட்டு விடும். உங்கள் ’கிக்’ பூர்த்தி செய்யப்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டதும், உங்கள் விற்பனையாளர் கணக்கில் ’கிக்’ பெறுமதியின் 80% சதவீதம் வரவு வைக்கப்படும். உங்கள் ”கிக்” பெறுமதி ஐந்து டாலராக ஆக இருந்தால், நான்கு டாலரே உங்களுக்குக் கிடைக்கும்.
.அனைத்து ஃபைவர் கிக்ஸின் அடிப்படை விலை ஐந்து டாலர்கள் என்பதை முன்னரே குறிப்பிட்டேன். ஆனால் ஒரு ஆர்டரை ”கிக் எக்ஸ்ட்ராக்கள் (Gig extras) எனப்படும் மேலதிக சேவைகள் வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்கள் வரை எளிதாக அதிகரிக்க முடியும், அதாவது தங்கள் சேவைக்கான கட்டணத்தை சேவை வழங்குநரே தீர்மானித்துக் கொள்ள முடியும். மேலும் ஒருவர் அவரது பல்வேறு திறமைகளுக்கேற்ப ஒன்றிற்கு மேற்பட்ட ’கிக்ஸ்’ களை உருவாக்கி பட்டியலிடவும் முடியும்.
ஃபைவரில் உங்கள் வருவாயை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றியோ, பே-பேல் –PayPal கணக்கின் மூலமோ திரும்பப் பெறலாம். ஃபைவரில் புதிதாக இணைந்தவர்கள் ஒரு கிக் – இனைப் பூர்த்தி செய்து 14 நாட்களின் பின்னரேயே தங்கள் வருவாயை மீளப் பெறலாம்.
ஃபைவரில் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோலாக இருக்கக் கூடாது. உங்கள் வாடிக்கையாளரின் திருப்தியும் மிக முக்கியம். அவர் திருப்தியடைய மட்டும். உங்கள் பணி தொடர வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைப்பதோடு ஐந்து நட்சத்திர மதிப்பாய்வும் (5star review) கிடைக்கும். இவை பிற வாடிக்கையாளர்கள் உங்கள் சேவைகளைப் பெற ஊக்குவிப்பதோடு ஃபைவரில் தொடர்ந்து நிலைத்து நிற்கவும் உதவும்.
உங்களிடமும் கணினி மற்றும் இணையம் சார்ந்த திறமைகள் இருந்தால் இப்போதே ஃபைவரில் ஒரு சேவை வழங்குநராக இணைந்து கொள்ளுங்கள்.
மேலும் உங்களைப் போன்ற திறமையுடன் இன்னும் பல சேவை வழங்குநர்கள் உங்களோடு போட்டியில் இருப்பர். அத்தோடு முன்னரே சேவைகள் வழங்கி தரப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர்கள் பட்டியலில் முன் நிலையில் இருப்பர். தரப்ப்படுத்தலுக்குள்ளானவர்கள் மிகச் சுலபமாக வேலைகளைப் பெறுவர்.