Trend Lancer

Fiverr ஒரு freelance ஆன்லைன் சந்தை Fiverr என்பது ஒரு சர்வதேச சந்தையாக செயல்படும் நன்கு அறியப்பட்ட வலைத்தளம். Amazon, eBay மற்றும் AliExpress போன்ற முக்கிய இணையதளங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் எப்படி இருக்கிறது என்பது போலவே, fiver என்பது இணையம் வழியாக சேவைகளை வழங்குவதற்கும் பெறுவதற்கும் நன்கு அறியப்பட்ட தளமாகும்.

இந்த இணையதளத்தின் மூலம் எண்ணற்ற கணினி மற்றும் இணையம் தொடர்பான சேவைகள் பெறப்பட்டு வழங்கப்படலாம். Fiverr ஒரு சேவைக்கு ஐந்து டாலர்களை வசூலிக்கிறார், ஒவ்வொரு கூடுதல் ஐந்து டாலர்களும் சேர்க்கப்படும். இதன் விளைவாக இடம் ஐந்து (ஐந்து) என்று அழைக்கப்படுகிறது.

எந்த நிறுவனத்திலும் முழு நேரபணியாளராக இணைந்து சேவையாற்றாத Freelancers எனப்படும் தனிநபர்களே உலக அளவில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் சேவைகளை வழங்க fiverr அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சம்பாதிக்கலாம் என எராளமான விளம்பரங்களை நீங்கள் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது பார்த்திருக்கலாம். ஆனால் அவற்றுள் அதிகமானவை போலியானவையாகவும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவையாகவுமே இருக்கும். அவ்வாறான விளம்பரங்களுக்குமத்தியில் fiverr தளம் எந்தவிதமான போலித்தனமும் இல்லாமல் திறமையுள்ள எவரும் மாதந்தோறும் இலட்சங்களில் சம்பாதிக்கக் கூடியவாறு உண்மையான ஆன்லைன் தொழில் வாய்ப்பை கடந்த பத்து வருடங்களாக வழங்கிவருகிறது.

Fiverr போன்று ஆன்லைன் சேவைகளை வழங்கவென freelancer, upwork, peoplesperhour என இன்னும் ஏராளமான இணையதளங்கள் உள்ளன. அவை கூட உலகளவில் மிகப்பிரபலமானவைதான். இத்தளங்கள் நிறுவனங்கள் சார்ந்ததும் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக் கூடியதுமான பெரிய செயற் திட்டங்களையே அதிகளவில் சந்தைப்படுத்துகின்றன. அவற்றில் சேவையாற்றுவோரும் professionals எனும் தொழில் வல்லுநர்களாகவே இருப்பர்.

ஆனால் அவற்றிற்கு மாறாக fiverr தளம் ஓரிரு நாட்களில் பூர்த்திசெய்யக் கூடிய தனிநபர் சார்ந்த (micro jobs) எனப்படும் மிகச்சிறிய வேலைகளை சந்தைப்படுத்துகின்றன. சில நேரம் அவ்வேலைகள் உங்கள் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப ஓரிரு மணித்தியாலங்களிலோ அல்லது ஓரிரு நிமிடங்களிலோ கூட செய்துமுடிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். உங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை ஒரே நிமிடத்தில் செய்து முடித்தாலும் அந்தவேலைக்குரிய கூலியாக ஐந்து டாலர் உறுதி என்பது ஓர் ஆச்சரியமானஉண்மை.

உங்கள் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய பல் வேறு திறமையுள்ள தொழிலாளர்கள் எங்களிடம் காத்திருக்கிறார்கள். நீங்களே அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு வேலைக்கமர்த்திக் கொள்ளலாம். உங்களுக்குத் திருப்தியான சேவையும் கிடைக்கும். வேலையாளுக்கு திருப்தியான ஊதியமும் கிடைக்கும். மத்தியஸ்தம் செய்யும் எங்களுக்கும் சிறிய கமிஷன் கிடைக்கும் இவ்வாறுதான் ஃபைவர் செயற்படுகிறது

Fiverr இல்

  • கிரேஃபிக் வடிவமைப்பு (Graphic Designing),
  • லோகோ வடிவமைப்பு(logo designing)
  • இணையதள வடிவமைப்பு (web designing),
  • ப்ளோக் உள்ளடக்கம் எழுதுதல் (blog content writing)
  • வீடியோ படங்களுக்குக் குரல் கொடுத்தல் (voice over)
  • காட்டூன் வீடியோ உருவாக்கம்
  • டீ-ஷர்ட் வடிவமைப்பு
  • சமூகவலைத்தளங்கள் மூலமான சந்தைப்படுத்தல (Social Media Marketing)
  • வீடியோ எடிட்டிங்
  • மெய்நிகர் உதவியாளர் பணி (Virtual Assistant)
  • கணிணி செய்நிரலாக்கம் (Programming)
  • அண்ட்ராயிட் செயலி உருவாக்கம்
  • மற்றும் தரவு உள்ளீடு (data entry)

போன்றன மிகவும் பிரபலமானவையும் அதிக தேவையும் உள்ள டிஜிட்டல் சேவைகளாகக் கருதப்படுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்டவை தவிர மொழிபெயர்ப்பு, கட்டுரைஎழுதுதல், கற்பித்தல் செயற்திட்ட உருவாக்கம், வணிகம், ஆலோசனை வழங்கள் என இன்னும் ஏராளமான ஆன்லைன் சேவைகள் ஃபைவர்தளத்தில் நீங்கள் காணலாம்.

fiverr தளத்தில் வழங்கப்படும் ஏதாவது ஒரு சேவையை ”Gig” எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, “உங்களுக்குதரமான logo ஒன்றை ஐந்து லாடருக்கு என்னால் வடிவமைத்துத் தரமுடியும்” என்பது சேவை வழங்குபவரின் ஒரு ”கிக்- Gig” ஆக இருக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?