ஆன்லைன் இணையதளத்தில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. இவற்றில் பல ஏமாற்று வேலைகளும் உள்ளன. நாங்கள் தான் நேர்மையான முறையில் பணம் வழங்கும் ஆன்லைன் வேலைகளை கண்டுபிடிக்க வேண்டும். பலர் வீட்டிலிருந்தவாறே Fiverr இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.
கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும். ஒரு சிலர் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது ஏமாற்று வேலை என்று நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறு. ஆன்லைனில் வேலை செய்து பல நபர்கள் கோடீஸ்வரராக மாறி உள்ளனர். ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன அவற்றுள் அதிகமானோர் பணம் சம்பாதிக்கும் சில வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
- போட்டோக்களை edit செய்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.
- புத்தகம் எழுதி பணம் சம்பாதிக்கலாம்.
- ஆன்லைனில் டியூஷன் எடுத்து பணம் சம்பாதிக்கலாம்.
- மொழிபெயர்ப்பு செய்து பணம் சம்பாதிக்கலாம்.
- Surveys செய்து பணம் சம்பாதிக்கலாம்.
- வெப்சைட் உருவாக்கி அதன் மூலமும் சம்பாதிக்கலாம்.
- Youtube சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
மேல கூறப்பட்ட வேலைகளை செய்து கொண்டு பலர் இணையதளங்களில் freelancing வேலை செய்து பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். இதே போல் நிறைய வழிகள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உள்ளன முக்கியமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பொறுமை தேவை. பொறுமையுடன் கடின உழைப்பும் முயற்சியும் இருந்தால் ஆன்லைனில் வெற்றி காண்பது உறுதி.